வாவ் காயின்! நடுத்தர வயது பெண்களை குறி வைக்கும் புதிய மோசடி! பேஸ்புக் பெண்களே உஷார்!

கோடிக்கணக்கான பணத்தை ஏமாற்றி வெளிநாட்டில் ஆடம்பர வாழ்க்கை வாழ நினைத்த கும்பலை விமானத்துறையினர் கைது செய்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் மேற்கு மாம்பலம் என்னும் பகுதியுள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் இந்திராணி. இவருக்கு ஃபேஸ்புக்கில் பல்வேறு ஃபாலோயர்கள் உள்ளனர். ஃபேஸ்புக் மூலம் மாதேஷ் என்பவர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார். பின்னர் மாதேஷ் வாவ் காயின் என்ற பண பரிவர்த்தனை முறையைப் பற்றி இந்திராணியிடம் கூறியுள்ளார். 

இது மிகவும் நல்ல தொழில் என்றும் பத்மஜ் செட்டி, அவரின் மகள் மற்றும் நண்பர் கிளைன்ட் ஜோசப் ஆகியோரை தொடர்புகொண்டு பேசுமாறு கூறியுள்ளார். அவர்களிடம் பேசியபோது, குறிப்பிட்ட பெரிய தொகையை நீங்கள் முழுவதுமாக செலுத்தினால் 10 ஆண்டுகளில் அது பன்மடங்காக உயரும் என்று கூறியுள்ளனர். அவ்வாறு இந்திராணி அவர்களிடம் 17 லட்சம் ரூபாயை ஒரே தவணையில் செலுத்தியுள்ளார். பணத்தைப் பெற்ற பிறகு ஆறு மாதத்திற்குள் பன்மடங்காக பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். 

குறிப்பிட்ட மாதம் முடிவடைந்த பிறகும் அவருக்கு பணம் கிடைக்கவில்லை. சந்தேகத்தில் நிறுவனத்தைப் பற்றி விசாரித்தபோது, அதுபோல நிறுவனம் என்பதை கண்டுபிடித்துள்ளார். தான் செலுத்திய தொகையை அவர்களிடம் மீண்டும் கேட்டபோது அவர்கள் இந்திராணியை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். 

இதனால் மிகவும் பயந்த இந்திராணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பந்தப்பட்ட 3 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வந்தனர். இதில்பத்மஜ் செட்டி மலேசியா இருக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் காவல்துறையினருக்கு கிடைத்தது. விமானப் படையினரின் உதவியோடு அவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். 

பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில் மோசடி செய்த 17 லட்சம் ரூபாயை பகிர்ந்து கொண்டதாகவும் தன்னுடைய பங்கிற்கு மலேசியாவிற்கு சென்று சொகுசு வாழ்க்கை வாழ எண்ணியதாகவும் கூறியுள்ளார். காவல்துறையினர் மீதமுள்ள 2 பேரை தேடி வருகிறது. இந்த சம்பவமானது சென்னை மீனம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.