23 வயசு பய உனக்கு 30 வயசாகுற என் மனைவி கேட்குதா? நண்பனை போட்டுத் தள்ளிய கோழிக்கறி லாரி டிரைவர்! குடியாத்தம் அதிர்ச்சி!

மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடுமாறு பல முறை கூறியும் கேட்காததால் நண்பரையே கொலை செய்த செய்த அதிர்ச்சி சம்பவம் குடியாத்தத்தில் நடைபெற்றுள்ளது


குடியாத்தம் மொய்தீன் பேட்டையில் ஹயாத் பாஷா தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் கோழி விநியோகம் செய்யும் லாரியில் கூலித்தொழிலாளியாக உள்ளார். இவருடன் பணிபுரிபவர் குடியாத்தம் திருநகரை சேர்ந்தவர் சுல்தான் பாஷா. இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் ஹயாத் பாஷா வீட்டிற்கு சுல்தான் பாஷா அடிக்கடி செல்வது வழக்கம்.

சில சமயங்களில் கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில் சென்று மனைவியுடன் பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது ஒரு கட்டத்தில் ஹாயத்பாஷாவுக்கு தெரியவர மனைவியை கண்டித்துள்ளார். மனைவியை கண்டிக்குமாறு உறவினர்களிடம் கூறியிருக்கிறார்.

ஆனாலும் சுல்தான் பாஷாவுடனான முறையற்ற உறவை கைவிடுவதாக இல்லை. இதனால் மனம் வேதனை அடைந்த ஹாயத் பாஷா, நண்பர் சுல்தான் பாஷாவை அழைத்து கண்டித்துள்ளார். அவரும் கைவிட மறுத்து தங்களது தெய்வீகக் கள்ளக்காதலுக்கு தீனி போட்டு வளர்த்துள்ளனர். பலமறை இருவரும் வீட்டிலேயே உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஹாயாத் பாஷா 2 நாட்களுக்கு முன்னர் சுல்தானை அழைத்து சென்று மது வாங்கி கொடுத்துள்ளார் ஹயாத் பாஷா. போதை தலைக்கேறியவுடன் நள்ளிரவு 1 மணி அளவில் கவுண்டன்ய ஆற்றுகரையோரம் அருகே அழைத்துச் சென்று அவரது தலையில் கட்டையால் தாக்கினார்.

மேலும் பெரிய கல்லை எடுத்து சுல்தான் தலைமீது போட்டு கொலை செய்து விட்டு வீட்டிற்கு வந்துவிட்டார். இதற்கிடையே சுண்ணாம்பு பேட்டை கவுண்டன்யாஆற்றங்கரை சுடுகாட்டில் தலை நசுங்கிய படி ரத்த வெள்ளத்தில் ஒரு சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்த போலீசார் சுல்தான் பாஷாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஹயாத் பாஷாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.