மூக்கின் வழியாக தண்ணீர் உறிஞ்சி கண்கள் வழியாக வெளியேற்றும் விநோத மனிதர்!

மூக்கில் தண்ணீரை உறிஞ்சி, கண் வழியாக அதை கக்கும் குங்பூ மாஸ்டர் ஒருவர் வியப்பை ஏற்படுத்துகிறார்.


குங்பூ உள்ளிட்ட தற்காப்பு கலைகளுக்குப் பெயர் பெற்ற நாடு சீனா. இங்குள்ள ஜிங்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் குங்பூ மாஸ்டர் சாங் யிலாங். இவர், புதுப்புது சாகசங்கள் செய்து, சுற்றுவட்டாரத்தில் பிரபல மாஸ்டராக வலம்வருகிறார்.

இந்த மாஸ்டர் சமீபத்தில் ஒரு வைரல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், மூக்கு வழியாக, தண்ணீரை உறிஞ்சி, அதனை கண்கள் வழியாக, வெளியே கக்கும் அவர், அப்படியே செய்து, செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சுகிறார். உங்களால் நம்ப முடியவில்லையா. உண்மைதான். 

அந்த வீடியோவில் முதலில், மூக்கில் தண்ணீரை இழுத்து, கண்கள் வழியாக வெளியேற்றி, ரோஜா செடிகளுக்கு நீர் பாய்ச்சும் மாஸ்டர் யிலாங், பின்னர் கண் வழியாக நீரை தெளித்து, பேப்பர் ஒன்றில் சீன எழுத்துகளை எழுதியும் காட்டுகிறார். இந்த வியப்பூட்டும் வீடியோ,தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பல ஆண்டு பயிற்சி மூலமாக, இப்படி அசாத்தியமான வித்தையை அசால்டாக செய்யும் மாஸ்டர் யிலாங்கை பலரும் பாராட்டுகின்றனர்.