இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் T20 போட்டிகளுக்கான ICC தரவரிசையில் மின்னல் வேகத்தில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
குல்தீப் யாதவ் , ரோஹித் சர்மா ICC T20 தரவரிசையில் முன்னேற்றம்!

ஒரு
நாள் போட்டி மற்றும் போட்டிகளில் அஸ்வினுக்கு மாற்றாக கண்டறியப்பட்டு களமிறக்கப்பட்ட
குல்தீப் யாதவ் அறிமுகம் ஆன போட்டியிலிருந்தே சிறப்பாக பந்து வீசி விக்கெட்களை வீழ்த்திவருகிறார்.
இவரின் நேர்த்தியான பவுலிங்கால் பேட்ஸ்ட்மேன்களை ரன் குவிக்க விடாமல் விக்கெட்களை சாய்ப்பதில்
இவர் வல்லவர்.
இந்திய
மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டியில் சிறப்பாக பந்து வீசியதன் மூலமாக இந்திய அணியின் குல்தீப் யாதவ் T20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இவர்
728 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கான் தொடர்ந்து முதலிடத்தில்
உள்ளார்.
இந்திய
அணியின் ரோஹித் சர்மா மூன்று இடங்கள் முன்னேறி 7வது இடத்தில் உள்ளார். நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பங்கேற்காததால் இவர் நான்கு இடங்கள் பின்தங்கி 19 வது இடத்தில் உள்ளார்.
போட்டிகளுக்கான
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணியின் லோகேஷ் ராகுல் 10 வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 11 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.