தோனி சுதந்திரமாக விளையாட விடுவார்! ஆனால் கோலி? குல்தீஷ் யாதவ் வெளியிட்ட தகவல்!

இந்திய உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.


கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்த இரு வீரர்களும் இந்திய அணியில் இடம் பிடித்து, சிறப்பாக பந்து வீசி விக்கெட்களை குவித்து வருகின்றனர். பேட்டி ஒன்றில் பேசிய இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்  குல்தீப் யாதவ், இந்திய அணியில் நானும், சஹாலும் இனைந்து மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி எதிரணியினரின் விக்கெட்களை வீழ்த்துவோம் என கூறியுள்ளார்.

மேலும் இந்திய அணி கோஹ்லியின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், கண்டிப்பாக இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பையை வெல்லும் எனவும் இவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் நான் பந்து வீசும் போது, பீல்டிங் செட் செய்ய ஏதாவது சந்தேகம் வந்தால், தோனியை பார்ப்பேன். அவர் தானாகவே முன் வந்து பீல்டிங் செட் செய்வதில் எனக்கு உதவி செய்வார் எனவும் அவர் கூறியுள்ளார்.

தோனி அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு சரியான பதிலை வைத்திருப்பார் எனவும் மேலும் தோனி எதிரணியினரின் பேட்ஸ்மேன்களின் உடலசைவிற்கு ஏற்றாற்போல எந்த ஏரியாவில் பந்து வீச வேண்டும் என்பதை சிறப்பாக கணித்து சொல்வர் எனவும் குல்தீப் யாதவ் கூறியுள்ளார். மேலும் தோனி மற்றும் கோஹ்லி இந்திய அணியின் முதுகெலும்பு எனவும் அவர் கூறியுள்ளார்.

தோனி வீரர்களை சுதந்திரமாக செயல்பட விடுவார் எனவும், கோஹ்லி வீரர்களின் தன்னம்பிக்கை அளவை அதிகரித்து எங்களை உற்சாகப்படுத்துவார் எனவும் குல்தீப் யாதவ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.