ஒரே நேரத்தில் பலருடன் கணவனுக்கு பாலியல் தொடர்பு! 2 குழந்தைகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு!

ஈரோடு மாவட்டத்தில் குடும்பத்தகராறு காரணமாக மனைவி மற்றும் தனது இரு குழந்தைகளுடன் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நம்பியூர் பகுதியில் வளையகார வீதி , குப்பி பாலம் அருகே காலிங்கராயன் வாய்க்காலில் ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகளின் சடலம் இருந்து வந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர் பின்னர் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்  இது குறித்து அந்த பகுதியில் விசாரணை நடத்தியபோது விசாரணையில் அந்த பெண் சேலம் மாவட்டம் ஆத்தூர் கள்ளக்குறிச்சி சாலையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி தமிழ்செல்வி 30, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டனும் தமிழ்ச்செல்வியும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்த போது காதல் ஏற்பட்டதாகவும் பிறகு  திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு  துர்காஸ்ரீ, தனுஸ்ரீ என்ற இரு மகள்களும் உள்ளனர்.

மணிகண்டன் ஆத்தூரில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. குடும்பத் தகராறு முற்றிய நிலையில் கடந்த 26ஆம் தேதி தமிழ்ச்செல்வி தனது இரு குழந்தைகளையும் தன் தாய் வீட்டிற்கு எடுத்துச் செல்வதாக கூறி புறப்பட்டதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளான தமிழ்ச்செல்வி தனது இரண்டு குழந்தைகளையும் துணியால் உடலில் கட்டியபடி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

கணவன் மனைவி குடும்ப தகறாறு காரணமாக ஏதுமறியாத அப்பாவி குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டாள்  தமிழ்செல்வி. இந்த பரிதாபம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.