2வது கணவருடன் பிரபலங்கள் வீட்டில் விருந்து! கவுசல்யாவை கரித்து கொட்டும் நெட்டிசன்கள்!

ஆணவக் கொலைக்கு முதல் கணவர் உடுமலை சங்கரை பறிகொடுத்துவிட்டு 2வதாக பறை இசை கலைஞர் சக்தியை திருமணம் செய்த கொண்ட கவுசல்யா பிரபலங்கள் வீட்டுக்கு விருந்துக்கு செல்வதை இணையதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.


மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்த கவுசல்யா, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த உடுமலை சங்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதை ஏற்க முடியாமல் அவரது தந்தை கூலிப்படை மூலம் மகள் மற்றும் மருமகனை கொலை செய்ய முடிவு செய்தார். கூலிப்படை நடத்திய தாக்குதலில் சங்கர் கொலையானார்.

   படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கவுசல்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் சங்கர் பெற்றோர் வீட்டுக்கு திரும்பினார். வாழும் வரை சங்கர் நினைவிலேயே இருந்து கொண்டு அவரது பெற்றோரை பார்த்துக் கொள்ளப்போவதாக கவுசல்யா கூறியிருந்தார். ஆனால் எவிடன்ஸ் கதிர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மூலம் கவுசல்யாவுக்கு முற்போக்கு இயக்கங்கள் பழக்கமாகின.

   ஆணவக் கொலைக்கு எதிரான சாட்சியாக தமிழகம் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கவுசல்யா கலந்து கொண்டு வந்தார். இந்த நிலையில் கோவையில் பறை இசைக்குழு நடத்தி வந்த சக்தியுடன் கவுசல்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் பறை இசை பழகிய போது கவுசல்யா மீண்டும் காதலில் விழுந்தார்.

   இதனை தொடர்ந்து கடந்த வாரம் இருவரும் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.  திருமணம் முடிந்த கையோடு கவுசல்யா தனது 2வது கணவர் சக்தியுடன் பிரபலங்கள் பலரது வீட்டுக்கு விருந்துக்கு சென்று வருகிறார். அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் வன்னி அரசு வீட்டுக்கு கவுசல்யா தனது கணவருடன் விருந்துக்கு சென்றுள்ளார்.

அங்கு சாப்பிட்டுவிட்டு அதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளனர்.   இந்த புகைப்படங்களை பார்த்து பலரும் கவுசல்யாவை விமர்சித்து வருகின்றனர். கணவர் கொலை செய்யப்பட்டுவிட்ட நிலையில் பெற்ற தந்தை சிறையில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கி உள்ளார். இந்த நிலையில் கவுசல்யா 2வது திருமணம் செய்து கொண்டதை கூட ஏற்கலாம் ஆனால் இப்படி வீடு வீடாக விருந்துக்கு சென்று அதனை புகைப்படமாகவும் வெளியிடுவது என்ன மாதிரியான மனநிலை என்று விமர்சித்து வருகின்றனர்.

   ஆனால் விமர்சனங்களை பற்றி எல்லாம் கவலைப்படாமல் இது தனது வாழ்க்கை தான் விருப்பபடி வாழ்வதாகவும், சங்கரும் இதையே தான் விரும்பியதாகவும் கவுசல்யா கூறி வருகிறார்.