காரைக்குடி காளை அணியினை வென்று மாஸ் காட்டிய கோவை கிங்ஸ் அணி !

லைகா கோவை கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்யாசத்தில் காரைக்குடி காளை அணியினை வென்றது .


முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்தது. அந்த அணியின் ஷாருக்கான் அதிகபட்சமாக 59 ரன்கள் விளாசினார் .

காரைக்குடி காளை அணியின் ராஜ்குமார் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை கைப்பற்றினார் .

பின்னர் களமிறங்கிய காரைக்குடி காளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை மட்டுமே எடுத்தது . அந்த அணியின் சாஜகான் அவுட்டாகாமல் 41 ரன்களை எடுத்தார் .இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர் . 

கோவை கிங்ஸ் அணியின் ஆண்டனி தாஸ்  மற்றும் ரங்கராஜன் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.