ஓரினச்சேர்க்கை..! போலீசுக்கே தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய சயின்ஸ் வாத்தியார்! பிறகு நடந்தது தான்..?

ராமநாதபுரம் போலீசார் குறைதீர்ப்பு மையம் செல்போன் எண்ணிற்கு ஆபாச படங்களையும் வீடியோக்களையும் அனுப்பிய பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த ஜூன் 17 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் போலிசார் குறைதீர்ப்பு மையம் செல் போன் நம்பருக்கு சில போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வந்துள்ளன. அப்பிரிவில் பணியாற்றி வரும் முதல்நிலைக் காவலர் கண்ணன் என்பவர் அந்த போட்டோக்களை பார்த்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த வீடியோவில் ஆண்கள் சிலர் நிர்வாணமாக இருப்பது மற்றும் பாலியல் உறவு கொள்வது போன்ற வீடியோக்கள் அடையாளம் தெரியாத ஒருவர் செல்போன் நம்பரில் இருந்து வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த காவலர் கண்ணன் என்பவர் ராமநாதபுரம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்பியது யார் என்று விசாரிக்குமாறு புகார் அளித்திருந்தார்.

சைபர் கிரைம் நடத்திய விசாரணையில் அந்த செல்போன் எண் கோவையை சேர்ந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் பிரேம் கிரன் பெயரில் உள்ளது என கண்டறியப்பட்டது. இதன் காரணமாக வழக்கு பதிவு செய்த தனிப்படை போலீஸார் நேரடியாக கோவை சென்று பிரேம் கிரணை ராமேஸ்வரம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில் அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் இவர் சொந்தமாக டுயூஷன் சென்டர் ஒன்றையும் நடத்தி வருகிறார். போலீசார் நடத்திய விசாரணையில் நண்பர்களுக்கு அனுப்புவதற்கு பதிலாக தவறுதலாக போலீசார் எண்ணிற்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியதாக கூறியுள்ளார். ஓரின ஈர்ப்பு கொண்ட பிரேம் கிரணிடம் அவரது நண்பர் ஒருவர் ராமநாதபுரம் போலீசார் இன் வாட்ஸ்அப் என்னை கொடுத்து சிக்க வைத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை போலீசாருக்கு அனுப்பியதால் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு அவரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.