கல்யாணம் பண்ணணும்னா இனி எய்ட்ஸ் பரிசோதனை கட்டாயம்! அதிரடி சட்டம் அமல்!

திருமணத்திற்கு பெரும்பாலும் ஜாதக பொருத்தம், ஒத்த மதம் மற்றும் ஜாதி என பல பொருத்தங்கள் பார்த்து , நல்ல நாள் நேரம் பார்த்து செய்து வைத்தாலும், இருவருக்கும் வரும் சண்டைக்கு பஞ்சமில்லை.


அதிலும் இருவரில் ஒருவருக்கு உடல் சார்ந்த நோய்கள் இருக்குமானால் அது மற்றவரையும் பாதிக்கும் என்பது பொதுவான வாதம் தான், சில முற்போக்கு சிந்தனையுள்ளவர்களும், இளம் தலைமுறையினர் கூட சினிமா பாணியில் எச் ஐ வி சோதனை செய்து அதன் ரிப்போர்ட் அடிப்படையில் தான் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறுகின்றனர்.

இது நடைமுறைக்கு சாத்தியாமா என்ற கேள்வி நிலவிய நிலையில் ஆம் என சட்டம் இயற்ற முன் வந்துள்ளது, கோவா அரசாங்கம். இனி திருமணம் செய்துக் கொள்ள விரும்புவோர் கட்டாயமாக திருமணம் பதிவு செய்வதற்கு முன்னதாக தங்களது எச் ஐ வி சோதனை ரிப்போர்ட் சமர்ப்பிக்க அம்மாநில அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

மேலும் வரும் காலங்களில் உடனடியாக அதை நடைமுறைபடுத்தவும் அம்மாநில அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.