கூத்தனூர் பெருமை

சோழ மன்னர்களின் அவையை அலங்கரித்த ஒட்டக்கூத்தர் மன்னரிடமிருந்து கூத்தனூரைப் பரிசாகப் பெற்றார்


சிறந்த சிவ பக்தரான அவர் வரகவி பாடும் ஆற்றலையும் கல்வியிலும் மேலும் சிறப்புற்று விளங்கவும் கூத்தனூரில் ஆற்றங்கரையோரம் நந்தவனம் அமைத்து வழிபடும் .......களைக் கடைப் பிடித்து கலைமகளை நோக்கி தவமிருந்தார். கலைமகள் அவர் முன் தோன்றி தம் வாய்த் தாம்பூலத்தை தந்தருளி நல்லாசி வழங்கினார். அன்றுமுதல் ஒட்டக்கூத்தரின் வேண்டுகோளுக்கிணங்க தோன்றிய இடத்திலேயே அர்ச்சாவதாரமாக அமர்ந்து அனைவருக்கும் அருள் புரியலானார் ஒட்டக்கூத்தரின் பெயரை ஒட்டியே இவ்வூர் கூத்தனூர் என வழங்கப்பெற்றது.

ஒட்டக்கூத்தரின் பேரன் வாசுக்கூத்தர் கலைமகளுக்கு கோயில் எழுப்பி திருப்பணி செய்தார் என இக்கோயில் கல்வெட்டு கூறுகிறது. சரஸ்வதி பூஜை தினத்தன்று இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கானோர் தன் குழந்தை, சிறார்களுடன் வந்து அவர்கள் கல்வி மேம்பட வேண்டிக்கொள்கின்றனர்.