சின்னத்தம்பி சீரியலின் நாயகன் பிரஜின். இவர் இந்த சீரியலில் மூலம் தனக்கென்று ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளார்.
திருமணமாக 10 வருடங்களுக்கு பிறகு பிறந்த பிரஜின் - சாண்ட்ரா தம்பதியின் இரட்டை குழந்தைகள் போட்டோ உள்ளே!

இவருடைய மனைவியும் பிரபலமான சீரியல் நடிகையாவார். அவரின் பெயர் சாண்ட்ரா என்பதாகும். இவர் கர்ப்பம் ஆனப்பிறகு சீரியலில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் இவருக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. பிரஜின் குழந்தைகளின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
.பிரஜின் தனது செல்லக்குட்டிகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். முகத்தை காட்டாமல் கால்களை மட்டும் புகைப்படம் எடுத்து போஸ்ட் செய்துள்ளார்.நிறைய பிரபலங்கள் தங்கள் குழந்தைகளின் கை மற்றும் கால்களை படம்பிடித்து அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்த போஸ்டை பார்த்தவுடன் ரசிகர்கள் பிரஜின் மற்றும் சாண்ட்ரா தம்பதியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். டிவி தொகுப்பாளர் ஆக தன் ஊடக வாழ்க்கையை தொடங்கிய பிரஜின் சின்னத்திரையின் மூலமாக மேலும் பிரபலமானார். தற்போது அவர் சில கோலிவுட் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.