சன் ரைசரை அடிச்சி நொறுக்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைபேட் செய்ய பணித்தது.பந்தைசேதப்படுத்திய காரணத்தினால் ஒருஆண்டு தடைக்கு பின் களமிறங்கிய டேவிட்வார்னர் இந்த போட்டியில் சூப்பராகவிளையாடி பவுண்டரிகளை விளாசினார். சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 53 பந்துகளில் 85 ரன்களை குவித்தார்.

அவருடன் களமிறங்கிய பரிஸ்டோவ் 39 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.அவருக்குஅடுத்தபடியாக களமிறங்கிய விஜய் ஷங்கர்அதிரடியா 40 ரன்களை சேர்த்தார். இதனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிநிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 181 ரன்களை எடுத்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின்ரஸ்ஸல் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

பின்னர் சேஸிங்க்கை தொடர்ந்த கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்  கிறிஸ் லின் வந்த வேகத்தில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் உத்தப்பா வுடன் ராணா இணைந்தார். பொறுப்பாக விளையாடிய இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் சற்றும் எதிர்பாராமல் வந்த வேகத்தில் அவுட் ஆனார். ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெறுவது கடினமாக இருந்தது. இந்த நிலையில் களமிறங்கிய ரஸ்ஸல் ருத்ர தாண்டவம் ஆடினார். இவர் அதிரடியாக 19பந்துகளில் 49 ரன்களை அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெற செய்தார்