கோலங்கள் சீரியல் தேவயானி தங்கை நினைவிருக்கிறதா? இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?

கோலங்கள் சீரியலில் தேவயானிக்கு தங்கையாக நடித்த நடிகை மஞ்சரி தற்போது முற்றிலும் மாறுபட்ட ஒருவராக காட்சியளிக்கிறார்.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலை நம்மால் அவ்வளவு எளிதில் மறக்க இயலாது . ஏனெனில் அந்த சீரியல் பல ரசிகர்களை கவர்ந்து இழுத்தது என்றுதான் கூற வேண்டும். இந்த சீரியலில் தேவயானி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தேவயானிக்கு தங்கையாக மஞ்சரி, ஆனந்தி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கொள்ளை கொண்டவர் நடிகை மஞ்சரி. 

இந்தக் கோலங்கள் சீரியலில் நடிக்கும்போது பலரின் பாராட்டுகளையும் வர்ணனைகளையும் பெற்றவர் இவர் . ஒருமுறை இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் கூட நீங்கள் சாவித்திரியை போல் முகபாவனைகளை உடனுக்குடன் மாற்றும் திறமை கொண்டவர் என்று பாராட்டிப் பேசி உள்ளதாக பேட்டி ஒன்றில் இவரே கூறியிருந்தார். இத்தகைய திறமைமிக்க நடிகை மஞ்சரி கோலங்கள் சீரியலுக்கு பின்பு வேறு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. அதற்கு பின்பு அவர் தன் கணவருடன் சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டார். 

நீண்ட நாட்களாகவே தென்படாமல் இருந்த நடிகை மஞ்சரி தற்போது தன்னுடைய முகநூல் மூலமாக ரசிகர்களுக்கு காட்சி அளித்துள்ளார் என்று தான் கூற வேண்டும். மிகவும் ஸ்டைலாகவும் அழகாகவும் காட்சியளிக்கிறார் அதுமட்டுமில்லாமல் இவளுக்கு தோளுக்கு மேல் வளர்ந்த ஒரு மகளும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்களும், " நீங்கள் எப்போது மீண்டும் சீரியலில் நடிக்க போகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் . அதற்கு பதில் அளித்த நடிகை மஞ்சரி எனக்கு பிடித்தமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நான் நிச்சயம் நடிப்பேன் என்று பதிலளித்துள்ளார்.