டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை! தொடர்ந்து கெத்து காட்டும் கோலி!

ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது .


டெஸ்ட் கிரிக்கெட்  பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில்  இந்திய அணி  முதலிடத்திலும் , நியூசிலாந்து அணி  2-வது இடத்திலும் ,தென்னாபிரிக்க அணி 3வது இடத்திலும் உள்ளது . 

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் விராட் கோலி 922 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார் . இவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன்  913 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார் . இந்தியாவின் சத்தீஸ்வர் புஜாரா  881 புள்ளிகளுடன் 3 வது இடத்திலும் உள்ளார் .

டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் ஜடேஜா  6வது இடத்திலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 10-வது இடத்திலும் உள்ளனர். டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா மூன்றாவது இடத்தில் உள்ளார்.