ஸ்டார்க் அசுர வேகத்தில் வீசிய பந்து! அலட்சியமாக சிக்சர் பறக்க விட்ட தல! வாயை பிளந்த கோலி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டியில் தோனி அடித்த சிக்ஸருக்கு கோஹ்லி செய்த ரியாக்சன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் 49வது ஓவரில் மிட்சல் ஸ்டார்க் வீசிய பந்தை தோனி லெக் சைடு திசையில் இமாலய சிக்ஸ் அடித்தார். 

இதனை எதிர் முனையில் ஆடிக்கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி, தோனி அடித்த சிக்ஸை கண்டு சில நொடிகள் வியந்து பார்த்து பின்பு தோனியிடம் சென்று சிரித்து பேசினார்.  கோஹ்லி செய்த ரியாக்சனை கண்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதை ஷேர் செய்து வருகின்றனர். 

இந்த போட்டியில் இந்திய அணியின் தவான் 117 ரன்களை குவித்து ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சாளர்களை திணறடித்தார். கோஹ்லி 82 ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.