கோலி அணியை தெறிக்கவிட்ட ரபடா!!

டெல்லி கேபிட்டல் அணிக்கு எதிரான ஐபில் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்துள்ளது.


டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பெங்களூரு அணி ரன்களை எடுக்க திணறினர்.  டெல்லி அணியின் ரபடா சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.  கிறிஸ் மோரிஸ் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.  பெங்களூரு அணியின் சார்பில் கேப்டன் கோலி  மட்டும் சிறப்பாக விளையாடி 41 ரன்களை சேர்த்தார். 
அவருக்கு அடுத்த படியாக மொயீன் அலி அதிரடியாக விளையாடி 32 ரன்களை எடுத்தார்.  இதனால் பெங்களூரு அணி 20 வர்களில் 149 ரன்களை மட்டுமே எடுத்தது.