நாங்கள் கொலை செய்யப்படலாம்! கோடநாடு வழக்கிற்குள் எடப்பாடியை இழுத்த வாளையார் மனோஜ் கதறல்!

கோடநாடு குற்றவாளிகளுக்கு கொலை மிரட்டல் உள்ளதாக வாளையார் மனோஜ் நீதிமன்ற வளாகத்தில் கதறியபடி பேட்டி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில்  நடந்த கொலை கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்டவர்களான சயான்,  மனோஜ் சாமி, திபு, ஜிதின்ஜாய், ஜம்சீர்அலி, சந்தோஸ்சாமி, உதயகுமார், சதீசன்,வாளையார் மனோஜ், பிஜின்குட்டி ஆகிய 10 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.  

போலீஸ் வாகனத்தில் பாதுகாப்புடன் கோவையில் இருந்து உதகை நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட வாழையார் மனோஜ்  செய்தியாளர்களிடம் கதறியடிப பேசினார். அப்போது எங்களுக்கு சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் அச்சுறுத்தல் உள்ளதாக மனோஜ் கூறினார். கேரளாவை சேர்ந்த 2 பேர் தங்களுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என மனோஜ் வழக்கறிஞர் ஆனந்த் தெரிவித்தார்.தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என கோடநாடு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்ற வளாகத்தில் பேட்டி அளித்ததால்  பரபரப்பு ஏற்பட்டது.