ராஜஸ்தான் ராயல்ஸை தாக்கிய கெய்ல் புயல்!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான IPL போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 184ரன்களை குவித்துள்ளது.


டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்து,கிங்ஸ் XI பஞ்சாப் அணியை  பேட்டிங் செய்ய பணித்தது.

தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.பின்னர் கிறிஸ் கெய்ல் உடன்  மாயங் அகர்வால் இனைந்து ரன்களை சேர்த்தனர்.

மாயங் அகர்வால் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒரு புறத்தில் கிறிஸ் கெய்ல் மட்டும் சிக்ஸ்ர் மற்றும் பவுண்டரிகளை விளாசினார். இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினார். இவர் 47 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

 சர்ப்ராஸ் கான் சிறப்பாக விளையாடி 46 ரன்களை எடுத்தார்.இதனால் கிங்ஸ் XI பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்களை குவித்தது. பெண் ஸ்டோக்ஸ் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.