சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 அடி நீள ராஜநாகம்..! ரயில் நிலையத்தில் பயணிகளை அலற வைத்த சம்பவம்!பதைபதைப்பு வீடியோ உள்ளே..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கொடிய விஷம் கொண்ட 10 அடி நீள நாகபாம்பு ஒன்று ரயிலில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கத்தோடம் ரயில் நிலையத்தில் இருந்து சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஒன்று இயக்கப்படுவது வழக்கம். இந்த ரயிலில் பயணிகள் ஏறும் கதவுகளின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் வேகனில் பத்தடி நீளம் கொண்ட கொடிய விஷம் கொண்ட பாம்பு சுருண்டு படுத்துக் கொண்டிருந்தது.

இதனை பார்த்த பயணிகள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்

உடனே அங்கிருந்த ரயில்வே காவல்துறை அதிகாரிகளுக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர்.

தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே காவல்துறை அதிகாரிகள் கொடிய விஷம் கொண்ட நாக பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் சேர்ந்தனர். 

இந்த பாம்பினால் பயணிகள் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கொடிய ரக ராஜநாகத்தை மீட்டு எடுக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை ஃபீல்ட் ஃபாரஸ்டர் டாக்டர் பி.எம்.தகாத்தே  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

இவர் வெளியிட்டுள்ள நாகப்பாம்பை மீட்கும் வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.