நான் இப்போ 7 மாசம் கர்ப்பம்! என்னையும் சுட்டுக் கொல்லுங்க! பெண் டாக்டர் குற்றவாளியின் மனைவி கதறல்! அதிர்ச்சி காரணம்!

என் கணவரை சுட்டுக்கொன்ற இடத்திலேயே என்னையும் கொலை செய்து விடுங்கள் என்று சின்னகேசவலுவின் மனைவி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்னர் 26 வயதான பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர், 4 லாரி ஓட்டுநர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இன்று 4 குற்றவாளிகளும் எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான சின்ன கேசவலு என்பவரின் மனைவி காவல் துறையினரிடம் ஒரு முறையீட்டை முன்வைத்துள்ளார். 

"எங்கள் இருவருக்கும் திருமணமாகி 1 வருடமே ஆகியுள்ளது. தற்போது நான் 7 மாதம் கர்ப்பமாக உள்ளேன். என் கணவரை சுட்டுக்கொன்ற அதே இடத்திலேயே என்னையும் சுட்டுக்கொலை செய்து விடுங்கள்" என்று அழுது புலம்பியுள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்பு சின்னகேசவலுவின் தாயார் என் மகனே எரித்து கொன்று விடுங்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.