நடுரோட்டில் செக்ஸ் சீண்டல்! திருப்பி அடித்த இளம் பெண்கள்! ஆனால் ஊர்க்காரர்கள் அரங்கேற்றிய கொடூரம்!

ஈவ்டீசிங்குக்கு ஆளான இளம் பெண்கள் அதனை எதிர்த்ததால் அவர்களை ஒழுக்கம் கெட்டவர்கள் என அவதூறு பேசியுள்ளனர்.


 கிராமப் பஞ்சாயத்தார் அவர்களை சரமாரியாகத் தாக்கியத்தோடு அப்பெண்களின் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் விதித்த கொடூரம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலத்தில்  மதுபானி மாவட்டத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தில் உறவினர்களான இரு இளம் பெண்கள் விறகு சேகரிப்பதற்காகச் செல்லும் நிலையில் அவர்களை இருவர் தொடர்ந்து ஈவ் டீசிங் செய்து வந்தததாகக் கூறப்படுகிறது.

சாலையிலேயே அந்த பெண்களின் ஆடைகளை பிடித்து இழுப்பது, அங்கங்களை வர்ணிப்பது, பின்னால் தட்டுவது என வரம்பு மீறியதால் அவர்களில் சிறுமியான ஒரு பெண் அந்த ஈவ் டீசிங் நபர்களை எதிர்த்து சண்டையிட்டார். மேலும் அந்த நபரை சிறுமி ஆபாசமாக பேசி சரியான பதிலடி கொடுத்ததுடன் சரமாரியாக தாக்கவும் செய்துள்ளார்.

தன்னை பாலியல் ரீதியில் சீண்டியவனை அந்த சிறுமி புரட்டி எடுத்து பதிலடி கொடுத்தார். இதையடுத்து அந்த நரிகள் ஊர்ப் பஞ்சாயத்தார் தலையிடக் கோரி அணுகிய நிலையில் பஞ்சாயத்தில் இருந்தவர்களோ நாய்களாக இருந்தனர். நாய்கள் நரிகளுக்கு ஆதரவாகவே பஞ்சாயத்து செய்தன.

ஈவ்டீசிங்கை பொறுத்துக்கொள்ளாத அந்தப் பெண்களை ஒழுக்கங் கேட்டவர்கள் என அவதூறு பேசிய பஞ்சாயத்தாரும் கிராம மக்களும் அந்தப் பெண்களின் தலை முடிகளை வெட்டி வீசியதோடு, சரமாரியாகத் தாக்கினர். இதனைத் தட்டிக் கேட்ட அந்தப் பெண்களின் சகோதரர் முறையிலான ஒருவரை கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து அவர் மூர்ச்சையடையும் வரை தாக்கியதாகவும், அவர் இறந்துவிட்டதாகக் கருதி விட்டுச் சென்றதாகவும் அந்தப் பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அந்தப் பெண்களுக்கு பாடம் கற்பிப்பதாகக் கூறி அவர்களது குடும்பத்துக்கு பஞ்சாயத்தார் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர். இதனால் செய்வது அறியாது அந்த பெண்கள் தவித்து வருகின்றனர்.