குழந்தை பெற்றெடுத்த இளம் பெண்ணுக்கு கணவன் வீட்டார் செய்த கொடூரம்!

கொச்சியை சேர்ந்த செவிலியர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் அவரது கணவர் போலீசில் சரணடைந்துள்ளார்.


கொச்சியை சேர்ந்த செவிலியர் அனலியா, சவுதி அரேபியா நாட்டில் ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். அவரது தாய் தந்தையரும் சவுதி அரேபியாவில் இருந்தனர். அப்போது திருச்சூரை சேர்ந்த ஜஸ்டின் என்ற இளைஞரை திருமண தகவல் மையம் மூலம் கண்டறிந்து அனலியாவுக்கு மணமுடித்து வைத்தனர்.

 

   ஜஸ்டின் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். திருமணத்திற்கு பிறகு அனலியா துபாய் சென்றார். அங்கு சென்ற சில மாதங்களில் ஜஸ்டினுக்கு வேலை போனது. போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து அவர்கள் கேரளாவுக்கு வந்தனர்.

 

   இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி அனலியா மாயமானார். மூன்று நாட்களுக்குப்பின் அவரது சடலம் பெரியாறு ஆற்றில் மிதந்தது. ஆனால் அவரது இறுதி ஊர்வலத்தில் அவரது கணவர் ஜஸ்டின் கலந்து கொள்ளவில்லை. இந்த வழக்கில் உள்ளூர் போலீசார் சரியாக செயல்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. 

 

தனது மகளின் மரணத்திற்கு நியாயம் கேட்டு அவரது தந்தை ஹாய் ஜீனியஸ் முதலமைச்சர் பினராயி விஜயனை நாடி உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார். இதையடுத்து வழக்கானது குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது அனலியாவின் டைரி சிக்கியுள்ளது.

 

  அதில் தனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு முழுக்காரணமும் தனது கணவரின் குடும்பத்தார் தான் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் அனலியாவுக்கு குழந்தை பிறந்த பிறகு தான் பிரச்சனை பெரிதானதாக சொல்கிறார்கள்.

 

   குழந்தை பிறந்து மூன்று மாதமாக இருந்த போது தான் அனிலியா மாயமானார், பின்னர் அவரது சடலம் கிடைத்தது. எனவே அனலயா மரணம் கொலையாகவும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

   தனது கணவர் ஜஸ்டின் போல் உலகில் சிறந்த ஒருவர் இல்லை என ஆரம்பத்தில் நினைத்ததாகவும் ஆனால் பின்னர் இது பொய்யாகி போனதாகவும் அந்த டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலையை இழந்து கேரளாவுக்கு திரும்பிய பின்னர் ஜஸ்டினின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதாகவும் தனது கை செலவுக்கு 100 ரூபாய் கூட அவர் கொடுத்தது இல்லை என்றும் அனலியா எழுதியுள்ளார்.

 

   இது ஒருபுறமிருக்க அவரது சகோதரருக்கு அனலியா அனுப்பிய குறுஞ்செய்திகளும் தனது கணவரால் தனக்கு ஆபத்து நேரிடும் என்பதை உறுதி செய்யும் வகையில் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில் ஜஸ்டின் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

 

   அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தனது மகளின் மரணத்திற்கு நியாயம் கிடைத்துவிட்டதாக ஹைஜீனியஸ் குறிப்பிட்டுள்ளார். தனது பேரனை ஜஸ்டின் குடும்பத்திடமிருந்து மீட்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.