கேரளாவில் ஆளுநரை முற்றுகையிட்ட எம்எல்ஏக்கள்! சட்டப்பேரவையில் பரபரப்பு!

கேரளாவில் சட்டமன்றத்திலே நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேச வந்த ஆளுநரை தடுத்து நிறுத்திய காங்கிரஸ் எம்எல்ஏக்களால் சற்று நேரம் அந்த இடம் பரபரப்பை சந்தித்தது.


கேரளாவில் ஆரிப் முகமது கான் ஆளுநராக பதவி வகித்து வருகிறார். இவர் இது தினம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் பேசுவதற்காக வந்தபோது அவரை காங்கிரஸ் மற்றும் அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் மற்றும் எம்எல்ஏக்கள் ஆகியோர் இணைந்து சட்டமன்றத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் கோபேக் கவர்னர் என்றும் முழக்கங்களை எழுப்பினர். 

அதாவது சட்டப்பேரவை வளாகத்திற்குள் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆளுநரை வரவேற்றார். பின்னர் அவரை அவைக்குள் முதல்வர் அழைத்து வந்தார். உடனே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து பேரவைக்கு உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். 

இருந்தபோதிலும் கேரள முதல்வர் பினராய் விஜயன் அங்கிருந்த காவல் அதிகாரிகளின் உதவியுடன் ஆளுநர் ஆரிப் முகமதை பத்திரமாக அவைக்குள் அழைத்துச் சென்றார். இதனால் அந்த இடத்தில் சற்று நேரம் சலசலப்பு நிகழ்ந்து வந்தது. இதனையடுத்து ஆளுநர் எதிராக கோஷங்களையும் முழக்கங்களையும் விட்ட எம்எல்ஏக்கள் காவலர்கள் மூலம் அதிரடியாக அவையை விட்டு வெளியேற்றப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.