முந்தா நாள் வரை டிரைவர்! இன்று ஒரே நாளில் கோடீஸ்வரன்! வேலை தேடி வெளிநாடு சென்ற இளைஞருக்கு அடித்த அதிஷ்டம்!

வெளிநாட்டுக்கு சென்று இளைஞருக்கு கோடிக்கணக்கில் குலுக்கல் பரிசு அடித்துள்ள சம்பவமானது அனைவரையும் ஆச்சரியப்பட செய்துள்ளது.


கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல் சலாம் ஷாநவாஸ். 1997-ஆம் ஆண்டில் வேலை நிமித்தமாக அபுதாபி சென்றடைந்தார். அங்கு தன் தொடக்க நாட்களில் ஓட்டுநராக பணியாற்றினார். இவருக்கு 7 வயதில் ஒரு மகளும், 14 வயதில் இன்னொரு மகளும் உள்ளனர்.

இவர் அபுதாபியில் 2500 திராம் சம்பளத்திற்கு ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அபுதாபியில் உள்ள ஒரு பெரிய மாலில் கடந்த 47 நாட்களாக குலுக்கல் போட்டிகள் நடைபெற்று வந்தன. 200 திராம் கொடுத்து குலுக்கல் முறையில் பங்கேற்க வேண்டும். பெயர் மற்றும் முகவரி எழுதி வைத்து வரவேண்டும். நாற்பத்தி ஏழு நாட்களுக்குப் பிறகு வெற்றி பெற்றவரின் பெயர் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தனர்.

அதன்படி 5-ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட முடிவில் இந்த குலுக்கல் முறையில் அப்துல் சலாம் ஷானவாஸ் வெற்றி பெற்று இருப்பதாக அறிவித்தனர். இதுகுறித்து ஷானவாஸ் கூறுகையில், "எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் இவ்வளவு பணத்தை என்னால் பெற்றிருக்க இயலாது.

என்னுடைய மனைவியிடம் தெரிவித்தேன். அவர் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளார். பரிசின் குறுஞ்செய்தியை நான் தவறுதலாக அழித்துவிட்டேன். இதனால் எனக்கு பரிசு விழாது என்று அஞ்சி இருந்தேன். ஆனால் கமிட்டியினர் என் செல்போன் எண்ணை வைத்து உறுதி செய்தனர். பணத்தில் ஒரு சின்ன வீடு கட்ட வேண்டும் அதன் பின்னர் பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்" என்று கூறினார்.