பொம்பள ரூட்டு தல பாத்து இருக்கீங்களா? பேருந்தில் டிரைவர், கன்டக்டரை தெறிக்கவிட்டு பீதி கிளப்பும் இளம் பெண்!

ரூட்டு தல பாணியில் கேரளப் பெண் பேருந்தில் தகராறில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.


சென்னை அரும்பாக்கத்தில் ரூட்டு தல என்ற பெயரில் அந்த பேருந்து செல்லும் ரூட்டில் யார் பெரியவர் என காட்டிக்கொள்ளும் ஆவேசத்தில் மாணவர்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பலர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சென்னையின் பல்வேறு இடங்களில் ரூட்டு தல மாணவர்களை அடையாளம் கண்டு காவல்நிலையத்துக்கு அழைத்து இதுபோன்று நன்னடத்தை கேடான செயல்களில் ஈடுபடுவதில்லை என உறுதிமொழி எழுதி வாங்கிக் கொண்டனர்.

அதே போன்றதொரு சம்பவம் கேரள மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. ஆனால் அதில் ஈடுபட்டவர் ஒரு பெண். கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து மலையாளம்புழாவுக்கு அந்த தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. 

தான் இறங்க வேண்டிய நிறுத்தத்தை தவறவிட்ட அந்தப் பெண் அந்த நிறுத்தத்தில் இருந்து பேருந்து வெகு தூரம் கடந்து வந்துவிட்ட பின் பேருந்து நிறுத்தத்திற்கு திருப்பச் சொல்லி நடத்துனரிடமும் ஓட்டுனரிடம் தகராறு செய்தார். ஆனால் அது பலனளிக்காத நிலையில் பேருந்து ஓட்டுநருக்கு முன்னால் உள்ள திண்டு போன்ற அமைப்பில் ஏறி அமர்ந்து கொண்டு ஸ்டியரிங்கை திருப்பியும் பேருந்தை நிறுத்தி திருப்பச் சொல்லி மிரட்டியும் தகராறில் ஈடுபட்டார்.

அந்தப் பெண்ணை நடத்துனர் சமாதானப்படுத்த முயன்ற போது அவரை ஆபாச வார்த்தைகளால் பேசியதை அடுத்து பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் மட்டுமன்றி பயணிகளும் அதிர்ந்தனர் இந்த சம்பவம் பேருந்தில் இருந்த ஒரு பயணியால் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது 

அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது குறித்தும் அந்தப் பெண்ணின் அடையாளம் குறித்தும் ஏதும் தெரியாத நிலையில் அது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.