கண்ணாடிக் கதவில் மோதிய இளம் பெண்..! அடி வயிற்றுக்கு கீழ் குத்திய கண்ணாடித்துண்டு! ஒரு நொடியில் ஏற்பட்ட பயங்கரம்!

கேரள மாநிலத்தில் வங்கியில் கண்ணாடி உடைந்து விழுந்ததில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


எர்ணாகுளம் அருகே கண்ணாடியை கவனிக்காமல் கதவில் மோதிய இளம் பெண், ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாவூரில் உள்ள பேங்க் ஆப் பரோடாவின் கிளைக்கு வந்த வீனா என்ற பெண், பணம் எடுப்பதற்காக சென்றார். வங்கிக்கு உள்ளே இருந்தபோது அவர் இரு சக்கர வாகனத்தின் சாவியை அதிலேயே வைத்துவிட்டோமே என யோசனை செய்தார். யாராவது வண்டியை திருடிவிடப் போகிறார்கள் என்று பயந்து போன வீணா உடனடியாக சாவியை எடுக்க வேகமாக வெளியே ஓடினார்.

அப்போது வாசலில் கண்ணாடி கதவு இருப்பதை கவனிக்காமல் வெற்றிடம் போல் தெரியவே வேகமாக தாண்டிச் செல்ல முயன்றார். அப்போது கண்ணாடி கதவுகள் உடைந்து கண்ணாடித் துகள்கள் தலை மற்றும் உடலில் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் அலறிய சத்தம் கேட்டு அருகில் இருந்தவர் காப்பாற்ற முன்வந்தார். ஆனாலும் சற்று நேரத்தில் சிதறிய கண்ணாடி துண்டுகளின் மேல் நிலைகுலைந்து விழுந்துவிட்டார் வீணா.10 நிமிடத்தில் வீணா மயக்கம் அடைந்தார். உடனடியாக வங்கியில் இருந்த பிற வாடிக்கையாளர்கள் வீனாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வீனா வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்திற்கு வங்கியின் வாயில் கண்ணாடி கதவு மிகவும் மெலிதாக இருந்ததே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.