மாற்றுத் திறனாளி சிறுவனின் கால்களை பிடித்து நன்றி..! நெகிழ வைத்த முதல்வர்! அசர வைத்த காரணம்!

மாற்றுத்திறனாளியுடன் கேரள முதலமைச்சர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கேரளா மாநிலத்தின் முதலமைச்சர் பினராய் விஜயன். இவருடைய செயல்பாடுகள் அந்த மாநில மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இவரை அம்மாநில மக்கள் போற்றி புகழ்ந்து வருகின்றனர். 

இதனிடையே பினராயி விஜயன் மாற்றுத்திறனாளியுடன் எடுத்து கொண்ட ஒரு புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிப்பதற்காக அவர் சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சரை சந்தித்துள்ளார். அந்த இளைஞருக்கு கைகள் இல்லாததால், காலால் நிவாரண நிதியை வழங்கியுள்ளார். 

பினராய் விஜயன் எந்தவித பகட்டுமின்றி, அந்த பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார். முதல்வர் சிறுவனின் கால்களை பிடித்து நன்றி தெரிவித்தார். மேலும் காலால் பினராய் விஜயனுடன் செல்பி எடுத்து கொண்டுள்ளார். இந்த புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த பலரும் பினராய் விஜயன் அவர்களின் இயல்பை பாராட்டி வருகின்றனர்.

இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.