DYFI தலைவர் முகமது ரியாசுடன் 2வது திருமணம் செய்து கொள்ளப்போகும் முதலமைச்சரின் மூத்த மகள் வீணா! எங்கு தெரியுமா?

கேரள முதலமைச்சர் பினரயி விஜயனின் மூத்த மகள் வீணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான DYFIன் அகில இந்திய தலைவர் முகமது ரியாசை 2வது திருமணம் செய்து கொள்ள உள்ளார்.


கேரள முதலமைச்சர் பினரயி விஜயனின் மூத்த மகள் வீணா. இவர் மென்பொருள் என்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் சொந்தமாக சாப்ட்வேர் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த அதே சமயம் DYFI தலைவர் முகமது ரியாசுக்கும் இடையே காதல் மலர்ந்தது. முகமது ரியாஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான DYFIன் அகில இந்திய தலைவர் ஆவார்.

அத்துடன் கேரளாவில் உள்ள அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேசும் பிரபலமும் ஆவார். கேரளாவில் இவரை தெரியாதவரே இல்லை என்றும் சொல்லாம். 2009 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெறும் 800 வாக்குகளில் இவர் வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

முகமது ரியாசுக்கும் - வீணாவுக்கும் வரும் 15ந் தேதி திருவனந்தபுரத்தில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீணா மற்றும் முகமது ரியாஸ் இருவருமே ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள். அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும்.