பாஜக பிரமுகர் - தொழிலதிபர் மகனுக்கு மனைவியாகிறார் கீர்த்தி சுரேஷ்? திரையுலக பிரபலம் உடைத்த சீக்ரெட்!

பிரபல சினிமா நடிகை கீர்த்தி சுரேஷ் பாஜக தொழிலதிபரின் மகனை திருமணம் செய்ய உள்ளதாக பிரபல நடிகர் தகவல் வெளியிட்டுள்ளார்.


ரஜினி முருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிகர் திலகம் திரைப்படத்தின் மூலம் தனது சிறப்பான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களின் தந்தை பிஜேபியில் முக்கிய பங்கு வகிக்கிறார். ஆகையால் அவரது தந்தை தனது மகளான கீர்த்தி சுரேஷை பாஜக  தொழிலதிபரின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்துவருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவரும் இந்த செய்தியை பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய நடிகர் பயில்வான் ரங்கநாதன் நடிகை கீர்த்தி சுரேஷ் பாஜக பிரமுகர் - தொழிலதிபரின் மகனை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இது நம்பகமான தகவல் தான் எனவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த  திருமணத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களும் ஓகே சொல்லிவிட்டாராம். ஆகையால் விரைவில் நடிகை கீர்த்தி சுரேஷ் பாஜக பிரமுகர் தொழிலதிபரின் மகனை திருமணம் செய்துகொள்வார் என தெரிகிறது.