மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷை பார்த்து இருக்கீங்களா? மன தைரியம் இருந்தால் பாருங்கள்!

கீர்த்தி சுரேஷ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


2000 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆவது ஆண்டில் கீதாஞ்சலி என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த "இது என்ன மாயம்" என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயீனாக தமிழ்  திரையுலகில் அறிமுகம் ஆனார்.

இவர் பேசும் கொஞ்சும் தமிழும் அழகான சிரிப்ப்பும் தமிழ் ரசிகர்களை, இவர் பின் அலையவைத்தது என்றே கூறலாம், ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா ஆகிய திரைப்படங்கள் இவருக்கு பெரிய வெற்றி படங்களாக அமைந்தது.  

குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த "மகாநதி" திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தது. இந்த படத்திற்காக பல விருதுகளையும் இவர் பெற்றார். 

நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் விதவிதமாக மேக்கப் அணிந்துகொண்டு தங்களது புகைப்படங்களை வெளியீடுவது வழக்கம். ஆனால் நமது கீர்த்தி சிறிது அளவு கூட மேக் உப்பு அணியாமல் தனது தோழிகளுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு உள்ளார். 

இதை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் மேக்கப் அணியாமலேயே கீர்த்தி மிகவும் அழகாக உள்ளார் என மகிழ்ச்சியாக  கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர். பொதுவாக சாதாரண நாட்களில் கீர்த்திக்கு மேக்கப் போடுவது பிடிக்காதாம். 

மேலும் கீர்த்தி சுரேஷ், பாலிவுட்டில் கால் பதிக்க உள்ளார், இதற்கான பணிகள்  தீவிரமாக நடைபெறுகிறது. இவர் நடிகர் அஜய் உடன்   இணைந்து நடிக போவதாக செய்திகள் கூறுகின்றன.