கீர்த்தி சுரேஷ் உடம்பு மெலிந்தது ஏன்? ஸ்ரீரெட்டி வெளியிட்ட பகீர் தகவல்!

சில காலங்களுக்கு முன்பு தெலுங்கு திரைப்பட உலகில் வசதியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி.


தன்னுடைய மார்க்கெட் குறைந்த பிறகு, அவர் சிறிது காலம் அடங்கியிருந்தார். பின்னர் பல்வேறு இயக்குநர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள், நடிகைகளை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதனை ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன்பு இவர் பல்வேறு நடிகைகள் மற்றும் நடிகைகளைப் பற்றி கீழ்த்தரமான ட்வீட்டுகளை பதிவு செய்து வந்தார். சில காலத்திற்கு அமைதியாக இருந்த அவர் தற்போது ஒரு வாரத்திற்கு முன்பு மீண்டும் ஒரு புயலை கிளப்பினார்.

அதாவது, "நடிகர் சங்கத் தலைவரான விஷால் அவர்களை மறைமுகமாக குறிப்பது போன்று பல்வேறு ட்விட்டுகளை பதிவு செய்தார். பின்னர் நெட்டிசன்கள் இவரை பெரிதளவில் எச்சரித்துள்ளனர். எந்த ஒரு சான்றும் இன்றி முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளை அவமதிக்க வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இன்று கீர்த்தி சுரேஷையும் தாக்கி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதாவது "நானும், கீர்த்தி சுரேஷும் ஒரே விமானத்தில் சென்று கொண்டிருந்தோம். என்னால் கீர்த்தி சுரேஷை கண்டுபிடிக்க இயலவில்லை. அவர் எலும்பும் தோலுமாக ஒல்லியாக மாறியுள்ளார்" என்று கிண்டலடித்துள்ளார். அவருக்கு ஏதோ நோய் என்றும் கூறி அதிர வைத்துள்ளார். 

அதுமட்டுமின்றி சாய் பல்லவி நன்றாக நடித்து வருகிறார் என்றும் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தவளை தன் வாயால் கெடும் என்று பெரியவர்கள் சொன்னது பொய்யல்லவே.