என்னதான் மனைவியாக இருந்தாலும்..? தொடக்கூடாத இடத்தில் தொட்டு வீடியோ.‌.! நடிகர் - மனைவி செய்த காரியம்!

பிரபல நடிகர் சாந்தனுவின் மனைவி கீர்த்தி தன் கணவர் தன்னை விரலால் தொடுவதற்கு ஏற்ப நடனமாடி வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமாகினார் கீர்த்தி. அந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பின் மூலமாக அதன் பின்னர் கீர்த்தி நாளைய இயக்குனர், ஜூனியர் சூப்பர் ஸ்டார் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவர் தற்போது டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் என்ற நிகழ்ச்சியை பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வருகிறார். கீர்த்தி பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜெயந்தியின் மகள் ஆவார்.

பிரபல நடிகர் இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை கீர்த்தி காதலித்து பெற்றோர்களின் சம்மதத்துடன் முறைப்படி கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக கலக்கி வரும் கீர்த்தி நடனத்திலும் கைதேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் நடனப்பள்ளி ஒன்றையும் சென்னையில் நடத்தி வருகிறார். தற்போது இந்த நடனப் பள்ளி மிகவும் பிரபலமாகி உள்ளது. இந்த நடனப் பள்ளியில் அவ்வப்போது திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் வந்து நடனமாடி அந்தப் பள்ளியை மேலும் பிரபலமாக்கி வருகின்றனர்.

தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீட்டிலேயே இருக்கும் கீர்த்தி தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது கணவனுடன் இணைந்து நடனம் ஆடுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.அந்தவகையில் நடிகை கீர்த்தி தற்போது தன்னுடைய கணவர் தன்னை விரலால் தொடுவதற்கு ஏற்ப நடனமாடி வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.