லாஸ்லியா கர்ப்பமா? தாலி கட்டினாரா கவின்? இணையத்தை கலக்கும் வைரல் போட்டோ!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.


இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர் . இந்த போட்டியில் பங்கேற்ற கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இருவரும் மைக் பேட்டரியை கழட்டி வைத்து இரவில் பேசிய சம்பவம் உலகநாயகன் கமலஹாசன் ஆல் மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் திடீரென்று லாஸ்லியா கவினை திருமணம் செய்து கொண்டதாகவும் மேலும் அவர் கர்ப்பமாக இருப்பது போலவும் சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்கள் பறந்து கொண்டிருக்கின்றன. இதனை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்றே கூறலாம்.  

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் பங்கேற்பதற்காக லாஸ்லியா பாவாடை தாவணியை அணிந்திருந்தார். அப்போது லாஸ்லியாவின் கழுத்தில் கவின் ஏதோ கட்டி விடுகிறார். இதனைப் பார்த்த மீன் கிரியேட்டர்ஸ் லாஸ்லியா அவருக்கும் கவினுக்கும் திருமணம் ஆகிவிட்டதாக மீம்ஸ்களை உருவாக்கியுள்ளனர். தற்போது இந்த மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது .