சின்ன டவுசருடன் உடற்பயிற்சி செய்யும் ஸ்ரீதேவி மகள்! பிரபல நடிகை வெளியிட்ட ஷாக் தகவல்!

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை கத்ரினா கைப், இயக்குனர் அபாஸ் ஜாபர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் "பாரத்" என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளார்.


இந்த திரைப்படம் வரும் ஜூன் 5, 2019 அன்று திரையில் வெளியாக போகிறது. நடிகை கத்ரினா கைப், பாரத் திரைப்படத்தில் நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடித்து உள்ளார்.  தற்போது இவர் இந்த திரை படத்தின் ப்ரோமோஷனில் ஈடுபட்டு உள்ளார்.  சமீபத்தில் இவர் நேஹா தூப்பியா நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய படத்தின் ப்ரோமோஷனுக்காக பங்கேற்றார். 

அப்போது பேசிய நடிகை கத்ரினாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. பேஷன் துறையில் சிறந்து விளங்கும் நடிகை கத்ரினாவிடம் "உங்களது ஜிம்மில் கவர்ச்சியுடன் உடை அணிந்து வருபவர்களை பற்றி கூறுங்கள்"  என்று கேள்வி எழுப்பினார் நிகழ்ச்சி தொகுப்பாளர் தூப்பியா. 

இதற்கு சற்றும் யோசிக்காமல் பதில் அளித்த நடிகை கத்ரினா, "தடக்" திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் கால் பதித்த நடிகை ஜான்வி கபூரின் உடையை பற்றி பேச ஆரம்பித்தார்.  நடிகை ஜான்வி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளாவார். "ஜான்வி ஜிம்மிற்க்கு அணிந்து  வரும் மிகவும் குட்டை குட்டையான டிரௌசர்களை பார்த்தால் எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது" என்றார். 

மேலும் பேசிய அவர், "நானும் ஜான்வியும் ஒரே ஜிம்மில் தான் அனுதினமும் உடற்பயிற்சி செய்கிறோம். ஜான்வி எப்போதுமே வெறும் குட்டை டிரௌசர்களை தான் ஜிம்மிற்க்கு அணிந்து வருவார். சில சமயங்களில் இதை பார்க்க பார்க்க எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது" என்றும் கூறினார்.

இளம் நடிகை ஜான்வி கபூர்  "குஞ்சான சக்சேனா பயோபிக்" என்ற திரைப்படத்தில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக உத்ரபிரதேசத்திற்கு சென்றிருந்தார்.  இந்த திரை படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஜான்வி சமீபத்தில் ஊருக்கு திரும்பியுள்ளார்.  தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான வேலைகளில் முழு மூச்சாக இறங்கியுள்ளார்.