வாத்து வனிதாவிடம் மோதிப்பார்க்கும் கஸ்தூரி! பிக்பாஸ் படு ஸ்பீடு

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில்  வனிதாக்கும், கஸ்தூரிக்கும் இடையே சண்டை ஏற்படுவது போன்று ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் விருவிருப்பு அதிகமாகி கொண்டே போகிறது. எதிர்பாராத திருப்பங்களும், நினைத்து பார்க்காத எலிமினேஷன்களும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை மிஞ்சும் அளவிற்கு அமைந்துள்ளது. இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

முதலாவது வீடியோவில், வகுப்பறை போன்று பிக்பாஸ் வீடானது வடிவமைக்கப்பட்டிருந்தது. கஸ்தூரியும், சேரனும் ஆசிரியர்கள் போன்றும், மற்ற அனைவரும் மானவர்கள் போன்றும் வேடமிட்டனர். அனைவரும் துள்ளி குதித்து விளையாடி கொண்டிருந்தனர். அனைவரும் தங்களுடைய குழந்தை பருவத்திற்கு சென்றனர்.

2-வது வீடியோவில், வகுப்பாசிரியையான கஸ்தூரி வனிதாவை பார்த்து, "வாத்து, வாத்து பாடலை பாட வா" என்றழைத்தார். கஸ்தூரி தன்னை வாத்து என்று அழைத்ததால் அவர் பாட வரவில்லை. மேலும் தன்னிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே பாட வருவதாக வனிதா அடம்பிடித்தார். பின்னர் வனிதா சேரனிடம், "ஸ்டூடன்ஸ் தப்பு பண்ணா டீச்சர் திட்டுவது போன்று, டீச்சர் தப்பு பண்ணா ஏன் ஸ்டூடன்ஸிடம் மன்னிப்பு கேட்க கூடாது" என்று கேட்பது போன்று வீடியோ முடிந்தது. 

ஆகையால் இன்று பிக்பாஸ் வீட்டில் சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புகள் நிறைய உள்ளதாக தெரிகிறது.