நாலு பெண்களை காதலிப்பது காமெடியா? பிக்பாஸில் கவினை எகிறிய கஸ்தூரி, ஹாட் மச்சி!

பிக்பாஸ் வீட்டில் இன்றைய ப்ரோமோவில் கஸ்தூரி கவினை சரமாரியாக கேள்வி கேட்டுள்ளதாக  வீடியோ வெளியாகியுள்ளது.


பிக்பாஸ் நிகழ்ச்சியானது சிறப்பான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. சென்ற வார இறுதியில் சரவணன் எலிமினேட் செய்யப்பட்ட காரணத்தை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 பிரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன. நேற்று சர்ப்ரைஸாக முன்னாள் போட்டியாளரான நடிகை கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். 

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரோமோவானது வெளியாகியுள்ளது. முதல் வீடியோவில் கஸ்தூரி, சேரன் கவின் ஆகியோர் கூடாரத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பது போன்று அமைந்துள்ளது. அப்போது கஸ்தூரி, கவினை பார்த்து "4 பெண்களை காதலிப்பது உங்களுக்கு காமெடியாக உள்ளதாக" என்று கஸ்தூரி கேட்டுள்ளார். இதற்கு சேரன் கவினுக்கு‌ ஆதரவாக பதிலளித்தார். குறுக்கிட்ட கஸ்தூரி, "4 ஆண்களை ஒரு பெண் காதலித்தால் இதேபோன்று ஜாலியாக ஏற்றுக்கொள்வீர்களா" என்று கேட்டுள்ளார்.

இன்னொரு வீடியோவில், "அனைவரும் அமர்ந்து வில்லுப்பாட்டு பாடுவது போன்றுள்ளது. கஸ்தூரி முதலில் பாட, அதைத்தொடர்ந்து சேரன், கஸ்தூரி ஆகியோர் பாடுவது போன்று அமைந்துள்ளது.

இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு கலகலப்பான சூழல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.