வீட்டுல வளர்த்த கன்றுக்குட்டி ரோட்டுக்கு வந்தா..! எல்லாம் தான் நடக்கும்..! வைரலாகும் நாகர்கோவில் காசியின் கிளுகிளு வீடியோ..!

பள்ளி சிறுமிகள் முதல் பெண் மருத்துவர் வரை 70க்கும் மேற்பட்ட இளம் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து அதன்மூலம் பணம் பறித்து வந்த காசி , பொள்ளாச்சி சம்பவம் குறித்து டிக் டாக்கில் வெளியிட்டிருந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் கணேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் தங்கப்பாண்டியன். இவர் அந்தப் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் பெயர் காசி. கல்லூரி படிப்பை முடித்த காசிக்கு வேலை ஏதும் சரியாக அமையாததால் தன்னுடைய தந்தையின் கடையிலேயே அவருக்கு உதவியாக இருந்திருக்கிறார். பார்ப்பதற்கு அமைதியான சாதுவான பிள்ளையாக காட்சியளிக்கும் காசி மிகப்பெரிய காமக்கொடூரன் என்பது தற்போது வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.

பள்ளி சிறுமிகள் முதல் பெண் மருத்துவர் வரை 70க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக வீடியோக்களையும் புகைப்படங்களை எடுத்து அதை வைத்து மிரட்டி அவர்களை தன்னுடைய இச்சைக்குப் பயன்படுத்தி இருக்கிறார் காசி. அதுமட்டுமில்லாமல் அவர்களை மிரட்டி பணத்தையும் பறித்து இருக்கிறார். காசி பொதுவாகவே சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர் ஆவார். தன்னுடைய ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது , ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வது போன்ற புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நல்லவர் போல் நடித்து அனைவரையும் தன் வசம் ஈர்த்திருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த இளம் பெண்கள் பலரும் இவர் மிகவும் நல்லவர் போல என்று இவரிடம் முதலில் பேச ஆரம்பித்துள்ளனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடன் காசி நெருக்கமாக பழக ஆரம்பித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர்களுடன் நெருக்கமாக பேசும் போன் கால்களை தன்னுடைய மொபைலில் ரெக்கார்ட் செய்து இருக்கிறார். பின்னர் அந்த பெண்களிடம் தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை காண்பித்து மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்திருக்கிறார் காசி. இவ்வாறாக காசி 70க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் பறித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அந்த பெண் மருத்துவர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் காசியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காசி பொள்ளாச்சி சம்பவத்தின்போது அவர்களுக்கு ஆதரவாக டிக் டாக்கில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் காசி, பொள்ளாச்சி வழக்கு என்னவென்று தெரியாமல் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த பசங்களுக்கு அந்தப் பெண்களின் அண்ணன் மிகவும் நெருக்கமான நண்பர்கள் ஆவர். இதைப்பற்றி நன்கு அறிந்தும் அந்த பெண்கள் ஏன் அவர்களுடன் நெருங்கி பழக வேண்டும். எதற்காக பேஸ்புக்கில் அவர்களோடு பேசியிருக்க வேண்டும். 

அப்போது அந்த பெண்களுக்கு தெரியவில்லையா தாங்கள் தவறு தான் செய்கிறோம் என்று. அந்த ஆண்களைப் பற்றி வீட்டிலுள்ள பெற்றோர் அண்ணன்கள் இடம் கூறியிருக்க வேண்டியதுதானே என்றும் காசி பெண்களைப் பார்த்து கேள்வி எழுப்பி இருப்பார். ஆனால் இந்தப் பெண்கள் யாரும் அவர்களைப் பற்றி தங்களது பெற்றோரிடம் கூறவில்லை. ஆண்கள் செய்வதைப் போலவே நாங்களும் செய்வோம் என்று பல விஷயங்களை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு விஷயத்தை எப்பொழுதுமே இயற்கையால் மாற்றமுடியாது. நான்கு சுவர்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த விஷயத்தை நான்காயிரம் பேருக்கு முன்னால் பேஸ்புக் டிக் டாக் ஆகியவற்றை பயன்படுத்தி அவிழ்த்துப் போட்டு ஆடுகிறார்கள். உங்களுக்கு ஒருவேளை அமெரிக்க கலாச்சாரம்தான் வேண்டுமென்றால் அங்கே சென்று இது மாதிரியான செயல்களில் ஈடுபடுங்கள்.

உங்கள் எல்லோருக்கும் ஒரு விஷயத்தை நன்றாக தெளிவுபடுத்துகிறேன கேட்டுக் கொள்ளுங்கள். வீட்டில் வளர்க்கும் கண்ணுக்குட்டி ரோட்டுக்கு தான் போவேன் என்றால் ரோட்டில் வரும் லாரியில் அடிபட்டு சாகத்தான் வேண்டும். அது யாராலும் மாற்ற முடியாது என்று பெண்களை குறிப்பிட்டு அந்த வீடியோ பதிவில் காசி கூறியிருக்கிறார். தற்போது காசி வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.