கருவாப்பையா கார்த்திகா நியாபகம் இருக்கா? இப்ப என்ன செஞ்சிட்டு இருக்காங்க தெரியுமா?

கடந்த 2006ம் ஆண்டு சஞ்சய்ராம் இயக்கத்தில் ஹரிகுமார், கார்த்திகா ஆகியோர் நடித்து வெளிவந்த படம் தூத்துக்குடி.


இந்த படம் அப்போது பெரிதாக பேசப்பட்டது .குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்றிருந்த கருவாப்பையா என்ற பாடல் பிரபலமானது.  இந்த பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகப் பிரபலமானவர் நடிகை கார்த்திகா. அதன் பின்னர் பிறப்பு என்ற ஒரு படத்தில் நடித்தார் கார்த்திகா. இந்த படத்தில் ‘உலக அழகி நான்தான்’ என்ற ஒரு பாடல் அப்போது பெரும் வைரலானது.

 அப்போதே படுகவர்ச்சியாக நடித்து இருக்கும் கார்த்திகா அதன் பின்னர் மதுரை சம்பவம், ராமன் தேடிய சீதை, தைரியம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன் பின்னர் தன்னுடைய தங்கச்சியின் படிப்பிற்காக கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக மும்பையில் வசித்து வந்த அவர் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்க போகிறார்.

 மேலும் கருவாப்பையா மற்றும் உலக அழகி நான் தான் இந்த இரண்டு பாடல்கள் தமிழ் ரசிகர்களிடையே எனக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்த பாடல்களை வைத்து நிறைய மீம் எல்லாம் வந்துள்ளது இதனால் மீண்டும் நான் நடிக்க உள்ளேன் என்று கூறியுள்ளார் கார்த்திகா.