பல நாள் பசி..! வேலை இல்லை..! கரூர் டூ ராஜஸ்தான்..! வீல் சேரில் கணவனை தள்ளிக் கொண்டு செல்லும் மனைவி!

ராஜஸ்தான் மாநிலம் செல்ல சென்னைக்கு மாற்றுத்திறனாளி கணவரை அவரது மனைவி வீல் சேரில் வைத்து தள்ளிக்கொண்டு தனது குழந்தைகளுடன் சாலை வழியாக நடந்தே செல்லும் குடும்பத்தினர்.


கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அச்சம் காரணமாக மே 17 ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் நாளை முதல் இரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவுறுத்துள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்திற்கு பலூன்கள் விற்பனை செய்யவந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 11 பேர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சொந்த மாநிலத்திற்கு திரும்புகின்றனர்.

இதற்காக இன்று காலை கரூரில் இருந்து 5 குழந்தைகளுடன் 3 பெண்கள், 3 ஆண்கள் என 11 பேரும் சாலை வழியாக நடந்தே கிளம்பி வந்துள்ளனர். இதில் பூரா என்ற மாற்றுத்திறனாளியை அவரது மனைவி வீல் சேரில் வைத்து தள்ளிக்கொண்டு வந்தது நெஞ்சை பதபதைத்தது. அப்போது பரமத்திவேலூர் அருகே வரும் போது தன்னார்வலர்கள் சிலர் அவர்களை நிறுத்தி உணவு அளித்தனர்

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சென்னைக்கு செல்வதாகவும் அங்கிருந்து இரயில் மூலம் சொந்த மாநிலத்திற்கு செல்வதாக கூறினர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் சாலை வழியாக நடந்தே சென்று கொண்டிருக்கின்றனர். நடந்து செல்லும் அந்த குடும்பத்தினரை தடுத்தி நிறுத்தி சென்னைக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும் என தன்னார்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.