ஆமாம் பிரபா எனக்கு 2வது மனைவி தான்..! ஜாதி மறுப்பு திருமணம் செய்ததாக கூறிய இளைஞர் வெளியிட்ட பகீர் தகவல்!

கோவையில் புதிதாக சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கார்த்திகேயன் என்ற இளைஞர் சக்தி தமிழினி தன்னுடைய இரண்டாவது மனைவி தான் என்று பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறார்.


கோவையில் துடியலூர் இடையர் பாளையம் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். சக்தி தமிழனி பிரபா என்ற இளம்பெண் திருச்சியை சேர்ந்தவர் ஆவார். கார்த்திகேயனும் சக்தி தமிழனி பிரபாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி சாதி மறுப்பு திருமணத்தை செய்து கொண்டனர். இரு வீட்டாருக்கும் தெரியாமல் செய்து கொண்ட இந்த திருமணத்தை கார்த்திகேயனின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். ஆனால் சக்தி தமிழனி பிரபாவின் பெற்றோர் திருமணத்தை ஏற்க மறுத்துள்ளனர்.

திருமணம் முடிந்த கையோடு தம்பதியினர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று முறையாக தங்களுடைய திருமணத்தை பதிவு செய்துள்ளனர். பின்னர் கார்த்திகேயன் அவரது மனைவியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக கார்த்திகேயன் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்த சக்தி தமிழனி பிரபாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகிய அனைவரும் கார்த்திகேயன் மற்றும் அவரது தாயார் வசந்தகுமாரி ஆகியோரை தாக்கி சக்தி தமிழனி பிரபாவை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு தாங்கள் வந்த காரில் கடத்தி சென்றுள்ளதாக அவரது கணவர் கூறியிருக்கிறார். 

இந்த தகராறில் காயமடைந்த கார்த்திகேயன் மற்றும் அவரது தாயார் வசந்தகுமாரி அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதனையடுத்து கார்த்திகேயன் உடனடியாக துடியலூரில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று. தன்னுடைய மனைவியை அவரது பெற்றோர் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாகவும் தன்னையும் தனது தாயாரையும் பலமாக தாக்கியுள்ளதாக புகார் அளித்திருக்கிறார். மேலும் அவர் தன்னுடைய மனைவியை அவரது பெற்றோர் ஆணவக்கொலை செய்து விடவும் அதிக வாய்ப்பு உள்ளதால் அவரை கூடிய விரைவில் மீட்டு தரும்படி போலீசாரிடம் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்த புகாரை பெற்றுக்கொண்ட துடியலூர் காவல் நிலைய அதிகாரிகள் கடத்தப்பட்டதாக கூறப்படும் சக்தி தமிழினியை விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் சக்தி தமிழினி தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தன் விருப்பப்பட்டுதான் தனது பெற்றோருடன் சென்றதாகவும் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய தந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்றும் ஒரு இரு நாட்கள் அவருடன் இருந்துவிட்டு பின்னர் கணவர் வீட்டுக்கு சென்று விடுவேன் என்றும் சக்தி தமிழினி கூறியிருக்கிறார். அவரது இந்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே சமயத்தில் சக்தி தமிழினியின் கணவர் கார்த்திகேயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை பதிவு செய்தார். அது சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் தான் தனது மனைவியை அவரது பெற்றோர் கடத்தி சென்றுள்ளனர் என்றும் எந்த நேரத்திலும் சக்தி தமிழினியை அவர்கள் ஆணவ கொலை செய்து விடலாம் என்றும் கூறியிருக்கிறார். ஆகையால் தனது மனைவியை பத்திரமாக மீட்டு தரும்படி கூறியிருக்கிறார். மேலும் தன்னுடைய வீட்டிற்கு வந்து சக்தி தமிழனின் பெற்றோர் தனது அம்மாவை தாக்கி தன்னுடைய மனைவி சக்தி தமிழினியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளையும் கார்த்திகேயன் போலீசாரிடம் கொடுத்திருக்கிறாராம். 

இந்த சம்பவத்தை பற்றி கார்த்திகேயன் கூறுகையில், எனக்கும் வேறொரு பெண்ணுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு ஒருவரை ஒருவர் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டோம். இவை அனைத்தும் சக்தி தமிழினிக்கு நன்றாக தெரிந்த பின்புதான் என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். நான் எதையும் அவரிடம் மறைக்கவில்லை என்று கார்த்திகேயன் கூறியிருக்கிறார். இந்நிலையில் கார்த்திகேயன் தனது மனைவியை மீட்டுத் தரும்படி ஆட்கொணர்வு மனு பதிவு செய்திருப்பது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.