கன்னட தேசத்தில் ஹரி நாடார் அரங்கேற்றிய பகீர் சம்பவம்! பனங்காட்டுப் படைக்கு தயாராகும் ஸ்கெட்ச்! தென்மாவட்ட பரபரப்பு!

கன்னட தேசத்தில் ஹரிநாடார் அரங்கேற்றிய பகிர் சம்பவத்தை அடுத்து போலீசார் பனங்காட்டு படைக்கு ஸ்கெட்ச் போட்டு தூக்குவதற்கு தயாராகியுள்ளது.


பனங்காட்டு படை கட்சி வேட்பாளராக போட்டியிட்டவர் ஹரிநாடார். அதாவது நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தை தட்டிச் சென்றார். திமுக அதிமுக கட்சிகள் அடுத்து இவர் தான் மூன்றாவது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவருக்கு சிங் நாடார் , ராஜா நாடார் , சுபாஷ் பண்ணையார் போன்ற பல முக்கிய தலைவர்களுடன் நல்ல பழக்கம். ஆனால் தற்போது ராக்கெட் ராஜா என்பவருடன் ஒன்றாகவே சுற்றித் திரிகிறார் ஹரி நாடார். இந்தியாவில் முதலீடு செய்ய நினைக்கும் வெளிநாட்டவருக்கு பாலமாக இருந்து செயல்படுவதை தான் ஹரிநாடார் தன் தொழிலாக செய்துவருகிறார்.

அதுமட்டுமில்லாமல் வட்டிக்கு விடும் தொழிலையும் ஹரிநாடார் செய்து வருகிறார். ஆனால் இவருடைய முக்கியமான தொழில் கடன் வாங்கி தருவதாக கூறி வெளிநாட்டவரயும் வெளிமாநிலத்தவர்களையும் ஏமாற்றுவது தான் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக விரிவாக்கத்திற்காக கடன் பெற்றுத் தருவதாக கூறி கோடி கோடியாக பணத்தை ஏமாற்றியதாக போட்டதாக ஹரிநாடார் மீது வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பல்கலைக்கழக விரிவாக்கத்திற்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பனங்காட்டு நரி மீது புகார் அளித்துள்ளதால் போலீசார் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து ஹரிநாடார் தலைமறைவாகி விட்டார். ஆகையால் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் விரைவில் பனங்காட்டு படை தலைவர் ஹரி நாடார் கன்னட சிறையில் கம்பி எண்ண போவது உறுதி என்று பலரும் கூறி வருகின்றனர்.