தப்புமா எடியூரப்பா அரசு?? கர்நாடகாவில் அனல் பறக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு..!!

நடந்து முடிந்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன.


இன்று வெளியாக உள்ள இடைத் தேர்தல் முடிவுகளை வைத்து தான் பாஜக கட்சியின் ஆட்சி கர்நாடக மாநிலத்தில் தொடருமா அல்லது தொடராதா என்று தீர்மானிக்க முடியும். 

அதாவது மொத்தமுள்ள 15 தொகுதிகளில் குறைந்தது ஆறு தொகுதிகளில் ஆவது பாஜக கட்சி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் பாஜக கட்சி கவிழ்ந்து விட அதிக வாய்ப்புகள் உண்டு. இதனால் பாஜக கட்சியினர் மிகுந்த ஆவலுடன் தேர்தல் முடிவுகளை நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், மஜத கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது இறுதியில் பாஜக 17 எம்எல்ஏக்களின் மனதை மாற்றி தன் வசப்படுத்தியது. இதனையடுத்து குமாரசாமி ஆட்சி முடிவுக்கு வந்தது. பின்னர் பாஜகவை சேர்ந்த எடியூரப்பா கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார்.

எம்எல்ஏக்கள் பதவியில் இருந்து வேறொரு கட்சிக்குத் தாவியதால் கட்சிதாவல் தடைச்சட்டம் இப்படி 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

ஆகையால் 17 தொகுதிகளில் காலிஇடம் தோன்றியது. இந்த இடங்களை நிரப்புவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

நடந்து முடிந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மாநிலம் முழுவதும் உள்ள 11 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எந்திரங்கள் அனைத்தும் மின் மயமாக்கப் பட்டதால் இடைத்தேர்தல் முடிவுகள் சுமார் 12 மணி அளவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக கட்சியினர் அனைவருமே வரப்போகிற தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி பெரும் எதிர்பார்ப்புகளோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் எடியூரப்பா கர்நாடக மாநிலத்தில் முடிவுக்கு வருமா அல்லது தொடருமா என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.