மகன் எம்எல்ஏ ஆன பிறகும் பால் விற்பனை செய்யும் தந்தை! அதிசயம் ஆனால் உண்மை!

கர்நாடக மாநில எம்.எல்.ஏ. ஒருவரின் தந்தை எளிமையாக இன்னும் சைக்கிளில் வலம் வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


74 வயது முத்தண்ணா பூஞ்சாவின் புகைப்படம்தான் இப்போது வாட்ஸ் ஆப் மற்றும் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. எளிமையாக லுங்கி சட்டை அலங்காரத்தில் பால்கேனுடன் சைக்கிளில் வலம்வரும் இவர், கர்நாடகாவின் பெல்தன்கடி எம்.எல்.ஏ. ஹரிஷ் பூஞ்சாவின் தந்தை.

தட்சிண கன்னட மாவட்டத்துக்கு உட்பட்ட, கர்டடி கிராமத்தில் மனைவி, மகளுடன் வசித்து வரும் இவர், இன்னும் விவசாயத்தை விடாமல் தொழிலாக செய்து வருகிறார். காட்டில் விழுந்து கிடக்கும் பாக்குகளைச் சேகரிப்பது, சைக்கிளில் சென்று பால் விநியோகிப்பது உள்ளிட்டவையே இவரது அன்றாட வேலை 

கடந்த ஆண்டு பெல்தன்கடி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவரது மகன் ஹரிஷ் பூஞ்சாவும் தன் தந்தையின் எளிய வாழ்க்கையை பெருமைக்குரியதாகவே கருதுகிறார். தங்கள் குடும்பம் ஏழ்மையானது என்ற அவர் தாங்கள் விவசாயத்தை சார்ந்தே வளர்ந்ததாகக் கூறுகிறார். தனது தந்தையின் வாழ்க்கை விவசாயத்தைச் சுற்றியே அமைந்துள்ளதால், தான் எம்.எல்.ஏ ஆன பிறகும் அதையே தொடர்ந்து செய்து வருவதாகவும் தெரிவித்தார்.