கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் விலை 80 கோடியா..? தலை சுற்றவைக்கும் பா.ஜ.க. அரசியல்!

பிஜேபி கட்சி தாவும் எம்.எல்.ஏ ஒவ்வொருவருக்கும் 80 கோடி தந்ததாக கர்நாடகாவில் வதந்தி றெக்கை கட்டிப் பறக்கிறது.


எப்படியோ ஜனநாயக வழியில் குமாரசாமி அரசைக் கவிழ்த்து பிஜேபி கர்நாடகாவில் ஜனநாயகத்துக்கு உயிர் கொடுத்து விட்டது.நேற்று ஊரில் இருந்தும் ஓட்டுப் போடாத முக்கியமானவர்களில் மோசமானவர் மஹேஷ் என்கிற கொல்லேகால் தொகுதி எம்.எல் ஏ. இவர் மாயாவதியின் சமாஜ்வாதி கட்சியின் ஒரே கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்.இவர்  நடக்க இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று யாருக்கோ சிக்னல் கொடுத்து அறிக்கை வெளியுட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து மஹேஷ் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும்,அதில் குமாரசாமிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் மாயாவதி உத்திரவு இட்டிருந்தார்.அந்த உத்தரவை அலட்சியப் படுத்திவிட்டு நேற்று கர்நாடக சட்டசபையில்  நடந்த வாக்கெடுப்பில் மஹேஷ் கலந்து கொள்ளவில்லை.

இதை அறிந்த மாயாவதி கர்நாடக பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ வான மஹஷை கட்சியை விட்டு நீக்கி விட்டதாக ட்வீட் செய்திருக்கிறார்.ஏற்கனவே மும்பையில் இருந்து பெங்களூரு திரும்பும் 16 சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் பதவி நீக்கம் செய்வாரா என்ற பரபரப்பில் இருக்கிறது கர்நாடகா,இப்போது மஹேஷையும் சேர்த்து 17 ஆகிவிட்டால் தமிழகத்தில் நடந்த அதே காட்சிகள் கர்நாடகத்தில் மறுபடியும் முதலில் இருந்து தொடங்கும் வாய்ப்பு இருக்கிறது.