எக்ஸ்பிரஸ் ரயில் 7 மணி நேரம் தாமதம்! நீட் தேர்வை 500 மாணவர்கள் தவறவிட்ட பரிதாபம்!

பண்ணிரன்டாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தது. தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் 19-ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.


தேர்ச்சி பெற்ற மாணவர்கள் என்ஜினியரிங் மற்றும் மருத்துவம் படிக்க ஆய்த்தமாகி வருகின்றனர்.கடந்த இரு வருடங்களாக மருத்துவ படிப்பிற்கு "நீட்" என்னும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும். இதனை எதிர்த்து விமர்சனங்கள் மற்றும் போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்று வந்தபோதிலும் இம்முறையும் நீட் தேர்வு நடந்துள்ளது.

தற்போதும் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இம்முறை கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி நீட் தேர்வு முறையை சாடியுள்ளார். அதாவது தேர்வு எழுத அமைக்கப்பட்டுள்ள நிலையங்கள் சிலருக்கு மிகவும் தொலைவில் இருந்ததால் அதிகளவில் மாணவர்கள் சிரமப்பட்டதாக கூறினார்.

குறிப்பாக வட கர்நாடகாவில் தேர்வு நிலையங்கள் அமைந்துள்ள மாணவர்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்கு சென்றடைய இயலவில்லை என்றார். ஹம்பி இரயில் 7 மணிநேரம் தாமதமானதால் 200 மாணவர்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்கு சென்றடைய இயலவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் கூறுகையில் கடைசி நேரத்தில் தேர்வு நிலையங்கள் மாற்றப்பட்டதும், அதைப்பற்றிய அறிவிப்பு மாணவர்களுக்கு தகுந்த முறையில் அறிவிக்கப்படாததுமே காரணம் என்று கூறியுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய மந்திரிகளான ஸ்மிருதி இரானி மற்றும் பிரகாஷ் ஜவடேகருக்கும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த கோரிக்கை விடுத்துள்ளார்.