32 வயது நடிகைக்கு கொரோனா உறுதியானது..! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..! யார் தெரியுமா?

கரீம் மொரானியின் மகள் சோவா மோராணிக்கு கொரானா வைரஸ் தொற்று இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.


கரீம் மொரானி பாலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருகிறார். அவருக்கு இரட்டை மகள்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான ஷாஸா மோராணிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது ஏற்கனவே உறுதியானது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஷாஸாவின் இரட்டை சகோதரி மற்றும் பாலிவுட் நடிகையான சோவா மோராணிக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் அடிப்படையில் அமையப் பெற்ற தகவலின் படி, மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் ராஜஸ்தானிலிருந்து திரும்பிய சோவா, கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் காணப்படுகிறார். இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் அவரை பரிசோதித்த போது அவருக்கு வைரஸ் தொற்று இருந்தது உறுதியானது.

இதனை அடுத்து, சோவா கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அச்சத்தையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரட்டை சகோதரிகள் இருவருமே மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்றும் அவரது தந்தை கரீம் மொரானி கூறியிருக்கிறார். 

ஷாருக்கானின் ரா ஒன், சென்னை எக்ஸ்பிரஸ், இனிய புத்தாண்டு மற்றும் தில்வாலே உள்ளிட்ட பல பாலிவுட் திரைப்படங்களை தயாரித்தவர் கரீம் மொராணி என்பது குறிப்பிடத்தக்கது