சூப்பர் ஓவரில் மாஸ் காட்டிய ஸ்ரீகாந்த் அனிருதா! த்ரில் வேட்டியை ருசித்த காரைக்குடி காளை!

காரைக்குடி காளை மற்றும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையேயான TNPL போட்டியில் சூப்பர் ஓவரில் காரைக்குடி காளை அணி த்ரில் வெற்றி பெற்றது.


முதலில் பேட்டிங் செய்த காரைக்குடி காளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது. அந்த அணியின் கேப்டன் அனிருதா 58 ரன்களை விளாசினார். 

பின்னர் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியினரும் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது. முரளி விஜய் 81 ரன்களை குவித்தார். இரு அணிகளும் 171 ரன்களை எடுத்ததால் ஆட்டம் ட்ராவில் முடிந்தது. 

இதனால் சூப்பர் ஓவருக்கு ஆட்டம் சென்றது. முதலில் ஆடிய ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 11 ரன்களை சூப்பர் ஓவரில் எடுத்தது. 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய காரைக்குடி காளை அணியின் கேப்டன் 2 சிக்ஸர்களை விளாசி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். சூப்பர் ஓவரில்  2 சிக்ஸர்களை விளாசிய அனிருதா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.