107 பேர் பலியான அந்த ஒரு நிமிடம்..! வீட்டு மொட்டை மாடியில் விமானம் விழுந்து நொறுங்கிய பதற வைக்கும் காட்சிகள் உள்ளே..!

பாகிஸ்தானில் பயணிகள் விமானம் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் கராச்சியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் விழுந்து நொருங்கி பயங்கர விபத்துக்குள்ளாகிய சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.


கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் பாகிஸ்தானில் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ஏ 320 விமானம் லாகூரில் இருந்து கராச்சிக்கு 99 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் என மொத்தம் 107 பேர் பயணம் செய்தனர். 

இந்த விமானம் கராச்சியில் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக கராச்சியில் உள்ள மலிர் பகுதியிலுள்ள மாடல் காலனி குடியிருப்பு பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதனால் அந்த பகுதியில் பெரும் புகை மூட்டம் ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விமானம் தனது முழு கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக விபத்துக்கு முன்னாள் விமானி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பயணம் செய்த 99 பேர் மற்றும் 8 விமான ஊழியர்கள் என அனைவரும் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமானம் விழுந்து நொருங்கியதில் குடியிருப்பு பகுதியில் 7 முதல் 8 வீடுகள் வரை சேதமடைந்துள்ளதாகவும் வீட்டில் குடி இருந்தவர்களின் நிலை என்ன என்றும் இதுவரை தெரியவில்லை. விபத்து நடந்த இடத்திலிருந்து இதுவரை 57 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு அருகே உள்ள ஒரு வீட்டில் இருந்த சிசிடிவி யில் விமான விபத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த விமானம் முதலில் இந்தப் பகுதியில் இருந்த மொபைல் டவரை தாக்கியதாகவும் பின்னர் அங்கு அருகே உள்ள மாடல் காலனி குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகள் மீது மோதியதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.