பறிபோகும் எம்.பி., பதவி! கலைஞர் சமாதியில் கண்ணீர் சிந்திய கனிமொழி! காரணம் ஸ்டாலின்?

தன்னுடைய பிறந்த நாளில் கருணாநிதி சமாதியில் நின்று அழுதிருக்கிறார் கனிமொழி. முன்னாள் இன்னாள் வி.ஐ.பி.கள் யாருமின்றி கனிமொழி பிறந்தநாளில் கண்ணீர் சிந்த காரணம் யார்..?


இப்போது தி.மு.க.வில் பெரும் சிக்கலில் இருந்தாலும், அதனை வெளிக்காட்ட முடியாமல் தவித்துவருபவர் கனிமொழிதான். கருணாநிதி உயிருடன் இருந்தவரை, ராஜாத்தியம்மாள் இல்லமும் ஒரு பவர் சென்டராகவே இருந்தது. அதனால் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் தொடங்கி அத்தனை வி.ஐ.பி.களும் அங்கேயும் ஒரு அட்டனென்ஸ் போட்டு வைப்பார்கள்.

கருணாநிதி மரணத்துக்குப் பிறகு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அழகிரியின் தர்மயுத்தம் தோற்றுப்போனதும், கனிமொழி அடக்கி வாசிக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டார். தானுண்டு, தன்னுடைய டெல்லியுண்டு என்று அமைதியாகத்தான் இருந்தார். அவர் சும்மா இருந்தாலும் ஸ்டாலினின் மருமகன் சும்மா இருக்க முடியவில்லை என்பதுதான் பிரச்னை.

சோனியாகாந்தி, இடதுசாரி தலைவர்கள், பா.ஜ.க. பிரமுகர்கள் என்று யாரெல்லாம் தி.மு.க. தலைமைக்கு நெருக்கமாக இருந்தார்களோ, அவர்கள் அத்தனை பேரையும் சபரீசனே நேரில் சந்திக்கத் தொடங்கிவிட்டார். நான்தான் இனி ஸ்டாலினுக்கு எல்லாமே என்று அழுத்தம் திருத்தமாகப் பதிய வைத்துவிட்டார். அதனால் டெல்லி பவர் சென்டராக இருக்கும் ஆசையும் கனிமொழிக்கு நிராசையாகிவிட்டது.

எந்தப் பஞ்சாயத்தும் வேண்டாம் எம்.பி.க்கள் குழு தலைவராக இருக்கலாம் என்று நினைத்தார் கனிமொழி. ஆனால், அங்கேயும் பிரச்னை. திருச்சி சிவா கனிமொழியை கண்டுகொள்ளாமல் தன்னுடைய இஷ்டத்துக்கு வேலை செய்கிறார். ஸ்டாலின் இதற்காக கூப்பிட்டு கண்டித்த பிறகும் தன்னுடைய போக்கை அவர் மாற்றிக்கொள்லவே இல்லையாம். 

பாண்டிச்சேரி கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து நடத்தும் போராட்டத்துக்கு சிவாவை வலிந்துபோய் கனிமொழி அழைத்தபோதும், அவர் கண்டுகொள்ளாமல் திரும்பிவிட்டார். ஆனாலும்சிவா  வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.  அதேபோன்று ஆ.ராசாவும் இப்போது கனிமொழி மீது கோபமாக இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்று கனிமொழி மூலம் காய் நகர்த்தினார் ராஜா. நம்மை கேவலப்படுத்திய காங்கிரஸ் கட்சியுடன் இணையவேண்டாம் என்று ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்க கனிமொழியைக் கேட்டுக்கொண்டார் ராஜா. ஆனால், கனிமொழியால் அதனை ஏற்க முடியவில்லை, என்பதும் ஒரு கோபம். 

இந்த பஞ்சாயத்துகள் எதுவும் வேண்டாம் தூத்துக்குடி எம்.பி. தேர்தலில் நிற்கலாம் என்று கணக்குப் போட்டு வேலை பார்க்க, இப்போது அங்கேயும் முட்டுக்கட்டை போடுகிறார் ஸ்டாலின். நம் குடும்பத்தில் இருந்து ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு. அதனால் தயாநிதிக்கு கொடுக்க நினைக்கிறேன், நீ சட்டசபைக்குப் போட்டியிடலாம் என்று கருத்தைக் கூட கேட்கவில்லையாம்.

இந்த லட்சணத்தில்தான் கனிமொழி தன்னுடைய பிறந்த நாளை கருணாநிதியின் சமாதியில் பெரும் சோகத்துடன் கண்ணீர் சிந்தியிருக்கிறார். எந்த ஆதரவும் இல்லாமல், மாஜிக்கள் யாரும் பின்னே வராமல் அப்பாவுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். கனிமொழி இன்னமும் அப்படியே பிள்ளைப்பூச்சி மாதிரி இருந்தால், கட்சியிலும் ஆட்சியிலும் அவருக்கு அல்வா மட்டும்தான் கிடைக்கும் என்கிறார்கள். 

சுதாரிக்கவேண்டியது கனிமொழிதான்.